Wednesday 9 May 2012

வழக்கு எண் 18/9





பாலாஜி சக்திவேலு அவர்களின் முயற்சிக்கு ஒரு விசில் போடு...

பணம் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கும் பணக்கார முதலைகளுக்கு தன் கதை மூலம் ஆசிட் அடித்திருக்கிறார் இயக்குனர் திரு பாலாஜி சக்திவேல்.

எதார்த்தமான ஒரு கதை களம் கொடுத்த உங்களுக்கு பெரிய சல்யூட் அடிக்கலாம்.

படத்தில் நம் மனதில் நிலைக்கும் கதாபாத்திரங்கள் ஜோதி, வேலு. இருவரின் நடிப்பும் மிக எதார்த்தம் . கதைக்கான அருமையான கண்டுபிடிப்பு இவர்கள்.




நாம் சொல்லும் டெக்னாலஜி எப்படி இந்த காலத்தில் சில மாணவர்களுக்கு பயன் படுது என்பதை இரண்டாம் பாதியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

நம் சட்டம் இப்படி தான் உள்ளது.... " நூறு ஏழைகள் தண்டிக்க படலாம் அனால் ஒரு பணக்காரன் தண்டிக்க பட கூடாது" ..... முட்டா பசங்க ... 

இந்த படம் ஒரு சரித்திரம். கண்டிப்பாக பார்த்து தீர வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று. 

அங்காடி தெரு படத்துக்கு தான் விருது கிடைக்கல இந்த படதுக்காவது கிடைக்குமா இல்ல இந்த முறை 3 படத்துக்கா???
 

No comments:

Post a Comment

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...