Friday, 27 July 2012

சின்ன குயில் சித்ரா!!!ஆறு நேஷனல் பிலிம் அவார்ட் பெற்ற ஒரே பெண் பாடகர் சின்ன குயில் சித்ரா விற்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 

சின்ன குயில் சித்ரா என்றால் நம் கண் முன் அவர் புன்னகையான முகம் தான் தோன்றும். பல பாடல் ஆசிரியர்களின் வரிகளுக்கு தன் மந்திர குரலால் உயிர் கொடுத்துள்ளார். என் நெஞ்சில் நின்ற அவர் பாடிய பாடல்கள் சிலபூஜைக்கு ஏத்த பூவிது ... [நீ தானே அந்த குயில்]

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் [புன்னகை மன்னன்]

பாடறியேன் படிப்பறியேன் [சிந்து பைரவி]

புத்தம் புது பூமி வேண்டும் [திருடா திருடா ]

தென் கிழக்குச் சீமையிலே [கிழக்குச் சீமையிலே]

கண்ணலானே எனது கண்ணை ... [பம்பாய் ]

நீ ஆண்டவனா தாய் தந்தை தான் ... [வானமே எல்லை ]

இன்னிசை பாடி வரும் [துள்ளாத மனமும் துள்ளும்] 

.........................
..........................

இன்னும் இசை துறையில் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்....

Thursday, 19 July 2012

கரகாட்டக்காரன்!!!பல வருடங்களுக்கு பிறகு நம்ம மக்கள் நாயகன் (பசு நேசன்) ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படம் சன் டிவியில் நேற்று பார்த்து ரசித்தேன். 

கவுண்டமணி, செந்தில் இருவரும் நடித்ததில் இந்த படம் ஒரு இமயம் என்று தயங்காமல் சொல்லலாம்.

கவுண்டமணியின் ஒவ்வொரு வசனமும் நக்கலின் உச்சமாக இருக்கும்....

அடே என்ன பார்த்து ஏன்டா அந்த கேள்வியை கேட்ட??

நீ வாங்குற அஞ்சு பத்து பிட்சைக்கு இது தேவையா?

என்னடி கலர் கலர் ஆ ரீல் விடுற...

வாயில பல்லு குச்சிய வச்சிட்டு எங்க அரண்மனைக்கா போவாங்க ?

தகர டப்பால பெயிண்ட் அடிச்சு அத இவரு தட்டுனா நீங்க அப்படியே நீங்க தில்லான ஆடிருவிங்கலோ....

ஒரே ஒரு முக்கா கை பனியன் இருந்தது அதுவும் இப்படி போயிருச்சு ....

படத்தோட இன்னொரு முக்கிய அம்சம் சண்முக சுந்தரத்தின் டயலாக்.. 


 உன்னக்காக ஏழு வருஷம் ஜெயில்ல இருந்தேன் அக்கா.. என்ன பூட்ஸ் கால்ல வாயில எட்டி உதசாங்க என் வாயில் இருந்து இரத்தம் ரத்தமா வந்திசுக்கா..உன் புருஷன் திருடன் ன்னு என் வாயல? எப்படிக்கா சொல்லுவேன் (அல்டிமேட் ஒன்) 

# கரகாட்டக்காரன் # கங்கை அமரன் # இசை ஞானி #ராமராஜன் #கவுண்டமணி # செந்தில்

Friday, 13 July 2012

பில்லா II


அஜித் படம்னா ரொம்ப ஸ்டைல் ஆக அவர காட்டனும் என்று டைரக்டர் சக்ரி டோலெட்டியிடம் யாராவது சொல்லி இருப்பாங்க போல 
அஜித் நல்ல ஸ்டைல் ஆக காட்டிவிட்டு படத்தின் கதையில் கோட்டை விட்டுட்டார்.

படத்தின் ட்ரைலர யுனிவேர்செல் ஆடி தள்ளுபடி மாதரி அடிக்கடி டிவியில் போடமால் இருந்திருந்தால் அஜித் இன் பஞ்ச் டயலாக் இன்னும் 
வெகுவாக அணைத்து சினிமா ரசிகர்களும் ரசிக்கும் படியாக இருந்திற்கும். # ஓவர் விளம்பரம் தமிழ் சினிமாவுக்கு ஆகாது

அஜித் அவருடைய ரசிகர்களை ஏமாற்றாமல் நடித்திருக்கிறார். அஜித்தின் நண்பராக வரும் ரஞ்சித் மிக அருமையாக அவருக்கு கொடுத்த 
வேலையை செய்து உள்ளார். கதாநாயகிகள் இருவரும் அப்ப அப்ப சால்ட் அண்ட் பெப்பர் போல வந்து போறாங்க.

வில்லன் இருவரும் ஆகா ஓகோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை.கிளைமாக்ஸ்ல வரும் ஹெலிகாப்ட்டர் காட்சியை மிக அருமையாக எடுத்து உள்ளனர். தல ரொம்ப ரிஸ்க் எடுத்து அந்த காட்சியை செய்துள்ளார்.

யுவன் ஏனோ படத்தில் பின்னணி இசையை பில்லாவில் செய்த அளவுக்கு இந்த படத்தில் தரவில்லை. Gangster பாட்டு ஏன் படம் முடிந்தவுடன் போட்டாங்க ன்னு தெரியல. 

அஜித் காகவும் & ராஜசேகர் (கேமரா) எடுத்த விதத்திற்காக ஒரு தடைவை தாரளமாக பார்க்கலாம். 

நல்ல கதை களம் கொடுத்திருந்தால் இந்த டேவிட் பில்லா அணைத்து ரசிகர்கள் மனதிலும் நின்று இருப்பார். 

பில்லா II - கண்டிப்பாக அஜித் ரசிர்களுக்கான படம். 

சக்ரி டோலெட்டி - #Fail
 

Sunday, 8 July 2012

நான் ஈ எனது பார்வையில்!!!
இத்தனை வருட தமிழ் பட வரலாற்றில் எடுக்க படாத முயற்சியை டைரக்டர் ராஜா மௌலி ஒரு சிறு ஈயை வைத்து அருமையாக படைத்துள்ளார் ....

சம்மர் ஸ்பெஷல் ஆக வந்திருக்க வேண்டிய படம்.. 

கண்டிப்பாக பார்த்து தீர வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று. டைரக்டர்க்காக ஒரு பெரிய சல்யுட் அடிக்கலாம். சுதீப்பின் நடிப்பு மிக அருமை சில நேரங்களில் ரகுவரனை நம் நினைவுக்கு கொண்டு வந்து போகிறார்.

நானி, சமந்தா இருவரும் அவர்கள் பங்கிற்கு நன்றாக நடித்துள்ளனர். 

சின்மயின் வாய்ஸ் சமந்தாவிற்கு மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது. சமந்தாவின் அடுத்த படமான நீ தானே என் போன்வசந்ததிலும் சின்மயின் தான் வாய்ஸ். # Chinmayiஒரு ஈயால் இப்படிக்குட பண்ண முடியுமா??? என்று என்னும் அளவுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் புகுந்து விளையாடிருகாங்க... 

படம் முடிந்து வரும் பொது நம் காதுக்குள் கொய்ங் கொய்ங் நு ஈ வர மாதரி ஒரு பீலிங் இருப்பது உறுதி...

டோன்ட் மிஸ் இட்!!!