Monday 17 September 2012

சுந்தரபாண்டியன்


சுப்ரமணிய புரம், நாடோடிகள், போராளி வரிசையில் டைரக்டர் சசிகுமார் ஹீரோ வாக நடித்து கலக்கி இருக்கும் படம் சுந்தரபாண்டியன். இப்படத்தில் தன் முந்தய பார்முலாவை தான் இங்கும் நமக்கு தந்துள்ளார் சிறிய மாற்றங்களோடு வெகு அழகாக . 



படத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக சசி குமார் ஒரு கெத்துடன் வலம் வருகிறார். அறிமுக பாடலில் ரஜினியின் டான்சை நம் நினைவுக்கு கொண்டு வந்து செல்கிறார். படத்தின் முதல் பாதி சசி குமார் , ஒரு டீ கடை , தாமரை என்ற தனியார் பேருந்து, ஆண்டிபட்டி பேருந்து நிலையம், பரோட்டா மணி(சுரி), அப்பு குட்டி அவருடைய நண்பர்கள் பட்டாளம் கதையின் நாயாகியான லக்ஷ்மி மேனனை சுற்றியே வேகமாக பயணிக்கிறது... 



தவணை முறையில் (ஒரு மாதத்துக்குள்) லக்ஷ்மி மேனனை காதல் வலையில் விழ வைக்க வேண்டும் என்று சசி குமார் அவருடைய நண்பருக்கும், அப்பு குட்டிக்கும் பெட் வைக்கிறார். நண்பர்களும் சுழற்சி முறையில் ட்ரை பண்றாங்க... ஆனா நம்ம ஹீரோ ஏற்கனவே லக்ஷ்மி மேனன்னை ஒரு தலையாக காதலித்தது தெரியாமல்... சசி குமார் தான் காதலித்த பெண் இவள் தான் என்று சொல்லும் காட்சியில் சூரியின் நடிப்பு அருமை. இந்த போட்டியில் அப்பு குட்டி கொல்ல படுகிறார் கொலை பழியை நம்ம கதையின் நாயகன் ஏற்று கொண்டு ஜெயிலுக்கு செல்கிறார். 

படத்தின் இரண்டாம் பாதயில் சசி குமார் எப்படி லக்ஷ்மி மேனன்னை கை பிடிக்கிறார் என்பதை விறு விருப்பாக மீதி கதையை சொல்லி முடிக்கிறார் டைரக்டர் "நட்புடன்" .

லக்ஷ்மி மேனன் கிராமத்து பொன்னுக்காண சிறந்த தேடல். # அட நம்ம கும்கி பட கதையின் நாயகியும் இவங்க தான் பா ... # கும்கி # லக்ஷ்மி மேனன்.

நரேன் (சசி குமாரின் தந்தை) & தென்னவன் ( லக்ஷ்மி மேனனின் தந்தை) இருவரின் நடிப்பும் மிக அருமை. 

படத்தில் ஒவ்வொரு கதா பாத்திரமும் அவ்வளவு அருமையாக தேடி எடுத்துள்ளார் டைரக்டர், குறிப்பாக சசிகுமாரின் பாட்டியாக வருபவர்கள், அத்தை பொன்னாக வருபவர் . லக்ஷ்மி மேனன் சித்தியாக வருபவர். 

" குத்தினது நண்பனா இருந்தா செத்தா கூட வெளியல சொல்ல கூடாது " # சசி குமார் # சுந்தர பாண்டியன் 

நட்பை மையமாக வைத்து இன்னொரு படம் சசி குமார் எடுத்தாலும் கண்டிப்பாக வெற்றி தான். # சசி குமார் # சுந்தர பாண்டியன் 
 

சுந்தர பாண்டியன் - நண்பேண்டா. 
 

No comments:

Post a Comment

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...