Wednesday 19 December 2012

நீ தானே என் பொன்வசந்தமும் என் இரண்டரை மணி நேரமும்!!!




நீ தானே என் பொன்வசந்தமும் என் இரண்டரை மணி நேரமும்!!!

இசை ஞானி இளையராஜா,கௌதம்,ஜீவா,சமந்தா, மற்றும் எவர் கிரீன் சந்தானம் ஆகிய பெரிய கூட்டணி கண்டிப்பாக படம் சூப்பரா இருக்கும் என்று போயி உட்காந்தா....

படம் ஆரம்பித்தவுடன் பாடல் "பிடிக்கல மாமு" இன்டெர் காலேஜ் மீட் செம எதிர்பார்ப்போடு ஒரு அரை மணி நேரம் போயிருக்கும் அப்புறம் எப்ப பாத்தாலும் வருண் அண்ட் நித்யா 16, 20 ,22 , 24 வயதில் மூணு மாசத்துக்கு அப்பறம் ன்னு போட்டு நம்ம பொறுமைய சோதிச்சுருவாறு டைரக்டர். கௌதம் உங்க லவ் சுப்ஜெக்ட் ல இருந்து கொஞ்சம் வெளியில வாங்க சார்.

இண்டர்வல் க்கு அப்பறம் வருண், நித்யா ரெண்டு பெரும் சண்ட போடுவாங்க சேருவாங்க.....சண்ட போடுவாங்க சேருவாங்க..... சமந்தா பொண்ணு கண்ணீர் வடிக்கும்.. நல்ல வேலை இரண்டு பெரும் (வருண் அண்ட் நித்யா ) ஒரு முடிவுக்கு 2.30 மணி நேரத்துல வந்தாதால வீட்டுக்கு கிளம்பியாச்சு ஷப்ப்ப்பா முடியலா!!! இதுல VTV சீன் வேற... 






படத்தில சில விஷயம் மட்டும் தான் ஆறுதல் இசை ஞானி இளையராஜா!!!, ஜீவா வின் நடிப்பு சில கட்சிகளில்,... சமந்தாவின் எக்ஸ்ப்ரெஷன்.... 

கௌதம் சார் பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்!!!

நீ தானே என் பொன்வசந்தம் - This could be your HEAD ACHE story!

Monday 17 December 2012

கும்கி







நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் விக்ரம் பிரபுவின் முதல் படம் , மைனா புகழ் டைரக்டர் பிரபு சாலமன் மற்றுமொரு மைல் கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் வந்த படம் தான் கும்கி... 

டைரக்டர் பிரபு சாலமன் வித்தியாசமான கதை களத்தை எடுத்து தனக்கு உரிய பாணியில் காடு, மலை, அருவிகளுக்கு நடுவே இந்த தடவை யானையையும் , பாகனை யும் வைத்து தந்துள்ளார்.

படத்தின் முக்கிய அம்சமாக உயிர் ஓட்டம் தந்தவர் இசை அமைப்பாளர் இம்மான்! ஒவ்வொரு பாடலும் மிக அருமை. கேமராமென் சுகுமார் ஒவ்வொரு காட்சியுளும் அசத்தியுள்ளார்! 






தம்பி ராமையா படத்துக்கான இன்னொரு பிளஸ். விக்ரம் பிரபு யானை பாகனுக்கு காண ஏற்ற தேடல். லக்ஷ்மி மேனன் நன்று. 

டைரக்டர் ராஜேஷ் க்கு சந்தானம் போன்று பிரபு சாலமன் க்கு தம்பி ராமையா.. கலக்கி புட்டிங்க சார் #தம்பி ராமையா.

படத்தில் சில இடங்களில் சுவாரசியம் இல்லை, கிராபிக்ஸ் காட்சி சொல்லும் படியாக வரவில்லை. மொத்தத்தில் கும்கி ஒரு தடவை கண் குளிர பார்த்து ரசிக்கலாம் !!!

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...