Sunday 13 January 2013

அலெக்ஸ் பாண்டியன்!!!





இந்த 2013ம் ஆண்டு  பொங்கல் ரேஸில் களத்துக்கு வந்த முதல் குதிரை அலெக்ஸ் பாண்டியன் , இந்த குதிரை 20 வருடத்திற்கு முன்னால் களத்திற்கு வந்திருந்தாலும் வெற்றி பெற்று இருப்பது  சந்தேகம் தான்.  டைரக்டர் சுராஜ் இந்த படத்தை  2011ம் ஆண்டு இறுதியில் ஆரம்பிச்சு இவ்வளவு நாள் என்ன பண்ணார்னு தெரியல.  

படம் ஆரம்பமே  அனுஷ்காவை வில்லன் கும்பல் தொரத்தி கொண்டு வருகின்றனர்  அப்ப  தான்  நம்ம சிறுத்தை கார்த்தியின் அறிமுகம்.ரயில் சண்டை காட்சியில் நம்ம விஜயின் வில்லு பட சண்டை காட்சியை இந்திய வரலாற்றில் முதன் முறையாக நம்ம டைரக்டர் சுராஜ் கட்சிதமாக முறியடித்துள்ளார்... இந்த  படத்தில் வரும் சண்டை காட்சிகள் இனி வரும் காலங்களில் தெலுங்கு படத்திற்கு முன் மாதரியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... சந்தானம் திரையில் தோன்றியதும் திரை அரங்கமே கை தட்டலளால் அதிர்ந்தது. இனி கதை நன்றாக நகர ஆரம்பிக்கும் என்று நினைத்தால் ஒரே மாதரியான காமெடி செய்து நம்மளை வெறுப்பு எத்துகிறார் சந்தானம்....இண்டர்வல் வரைக்கும் திரை அரங்கத்தில் உள்ள எவருக்கும் கதை என்ன என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து உள்ளார் நம்ம டைரக்டர். அது வரைக்கும் எதோ காமெடி சேனல்ல "வாங்க மொக்க போடலாம்" ன்னு நிகழ்ச்சி நடத்துன மாதரி இருந்தது.... ரொம்ப நம்ம  பொறுமைய சொதிச்சிடாங்க!!!



இண்டர்வலுக்கு அப்புறம் நம்ம சிறுத்தை என்று சொல்லும் கார்த்தி பிளாஷ்பக் சொல்லறார்...எதோ மாத்திரை அமெரிக்கால இருந்து நம்ம தமிழகத்துக்கு கப்பல வந்திருக்கு அத தமிழக முதல் அமைச்சராக இருக்குற நம்ம நேர்மையான விசு  சார் கையெழுத்து போட்டா தான் தமிழகத்துக்குள் கொண்டு வர முடியும்.அதானல வில்லன் இருவரும் சேர்ந்து யோசனை செய்து அதற்கு ஒரு சாமியார் இருக்கிறார் அவர் சொன்னால் நம்ம சி.எம் கேட்பார் என்று அவரிடம் செல்கின்றனர் அவரும் தனக்கு பங்கு வேண்டும் என்று கூறி நம்மால் எதிர்பார்க்க முடியாத ஒரு  திருப்பத்தை தந்துள்ளார் டைரக்டர் சுராஜ்.என்ன ஒரு ட்விஸ்ட் இதுக்கு பில்ட்ஆப் பண்ற மாதிரி ஒரு இசை வேற எனத்த சொல்லறது..



சி.எம்  மகளான  அனுஷ்காவை  கடத்த  நம்ம  கார்த்திக் உதவியை  நாடுகின்றனர். அப்புறம்  என்ன  நம்ம  அனுஷ்காக்கு  ஹீரோ மேல காதல் ஏற்பட்டு 2 பாட்டு  வருது அப்புறம் நம்ம ஹீரோ நாட்டின் மேல் உள்ள பற்றால் கிளைமாக்ஸ் ல எல்லாரையும்  அடிச்சு தும்சம்  செய்றார் .இதுல  நம்ம டைரக்டர்  காமெடி ட்ராக் கொண்டு சினிமாவில் புதிய திருபத்தை கொடுத்துள்ளார்.நம்ம சி.எம் கையெழுத்து போட 1 மணி நேரம் இருப்பதால் வில்லன் இருவரும் ஹீரோ வை கட்டி போட்டு கால் பந்தால்  உதைகின்றனர்.அப்ப நம்ம கதையின் நாயகி டேய் அவர் கை கெட்ட கழட்டி விட்டு அடிச்சு பாருங்கன்னு சொன்னதும் அடேங்கப்பா...

பிரதாப் போத்தன் சி.எம் PA வாக வந்து அவரை இறுதியில் கெட்டவராக காட்டி சினிமா வரலாற்றில் யாருமே கண்டிராத ட்விஸ்ட் தந்துள்ளார் சுராஜ்..

மொத்தத்தில் சுராஜ் தொடர்ச்சியாக 3 முறை பிளாப் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில்  நீங்காத இடம் பிடித்து அடுத்த  வரும் தன்  படங்களுக்கு எச்சரிக்கை  விடுத்தள்ளார். சுராஜ் அண்ட் கார்த்திக் பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்....


No comments:

Post a Comment

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...