Tuesday 15 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா விமர்சனம்!!!







திரைகதை திலகம் கே. பாக்கியராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளி வந்த சக்கை போடு போட்ட "இன்று போய் நாளை வா"  படத்தின் கதை தான் இந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா... 


இயக்குனர் மணிகண்டன் சிறு சிறு மாற்றத்துடன் இந்த படத்தை சந்தானம்,பவர் ஸ்டார், மற்றும் சேது வை வைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பொங்கலன்று சுவையான லட்டை கொடுத்துள்ளார். 


படத்தின் கதை ஊருல வேலை வெட்டி எதுவும் இல்லமால் சும்மா சுத்துற மூன்று நண்பர்கள் (சிவா , கே.கே , நம்ம பவர் குமார்) , ஒரு பெண்ணை (விஷாகா) மூன்று பேரும்  தொரத்தி தொரத்தி காதலிகின்றனர். கடைசியில் யார் விஷாகா வை கை பிடித்தார் என்பதை அருமையான நகைச்சுவையுடன் வழங்கியுள்ளார்  இயக்குனர். 


மூன்று நண்பர்களின் அறிமுக காட்சி தான் டாப் அதுலயும் நம்ம பவர் ஸ்டார் இன்ட்ரொ சரியான மாஸ். திரை அரங்கில் அப்படி ஒரு அப்லாஸ்!!! பிளஸ் டூ படிக்கிற பொண்ணுக்கு பவர் ஸ்டார் நூல் விடுற காட்சியும் அந்த பொண்ணு உங்களை எங்க அப்பா கல்யாண போட்டோல பாத்திருக்கிறேன்  நீங்க அப்பாவோட நண்பர் தான என்று சொல்ல பவர் பேசி  சமாளிக்கிற காட்சி சரியான கலாய். 




சந்தானம், பவர் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் டாப். பவர் ஸ்டாரின் ஸ்க்ரீன் பிரசன்ஸே காமெடி தான். மனுஷர் டயலாக் தான் சரியாய் மேட்ச் ஆகல மத்த படி இந்த பொங்கல் நம்ம பவர் பொங்கல் தான்...

சந்தானத்துக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் குருவாக VTV கணேஷ் வந்து அசத்தியுள்ளார். சந்தானம் கணேஷுக்கு பாடை கட்டும் சீன் சரியான கிளாஸ்!!!  VTV கணேஷின் மனைவியாக கோவை சரளா பட்டாசு போல் பட பட வென வந்து பேசி போகிறார். சந்தானம் தன் படம் என்றதால் என்னமோ மனுஷன் ரொம்ப மெனக்கட்டு நடிச்சிருக்கிறார்.

 தமிழ் சினிமாவில் கவுன்ட்டர் அட்டாக் காமெடி சந்தானத்துக்கே உரியதாய் விட்டது. தன்னை பெரிய திரைக்கு அறிமுக படுத்திய சிம்புவுக்கு சந்தானம் மரியாதை செய்யும் நிமித்தமாக இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துள்ளார். #நண்பன்டா 




சேது ரொம்ப அலட்டி கொள்ளாமல் நடித்து பொய் இருகிறார். விஷாகா கொடுத்த வேலையை தன்னால் முடிந்தமட்டும் செய்து இருக்கிறார்! ராதிகாவிடம் இருந்த வெகுளி தனம் விஷாகாவிடம் இல்லை. பட்ஜெட்க்கு ஏத்த மாதரி தான ஹீரோயின் கிடைக்கும். 

படத்தின் இசை அமைப்பாளர் தமன் "கண்ணா லட்டு தின்ன ஆசையா", "லவ் லெட்டெர் கொடுக்க ஆசை பட்டேன்" பாடல்களை அருமையாக தந்துள்ளார். 

கண்ணா லட்டு தின்ன ஆசையா நன்றாக ர(ரு)சித்து பாருங்கள்...



2 comments:

  1. நல்ல விமர்சனம் மச்சி... கீப் கோயிங்... சீக்கிரமே விமர்சன உலகின் பவர் ஸ்டாராக வாழ்த்துகள் :))

    ReplyDelete
  2. கமெண்ட் பப்ளிஷிங்கில் உள்ள Word Verficationஅ எடுத்து வுடு மச்சி...

    ReplyDelete

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...