Monday 11 February 2013

விஸ்வரூபம் எனது பார்வையில்!!!






மே 1 2012 விஸ்வரூபம் டீசெர் ரிலீஸ் ஆன நாள் முதல் அணைத்து தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்ப படம் வெளிவரும் என்று. பல தடங்கல்களுக்கு பிறகு  உலக நாயகன்  படைப்பு  நம் தமிழகத்தில் பிப்ரவரி  7ம்  நாள் ரிலீஸ் ஆனது. தன் ஒவ்வொரு படைப்புகளிலும் தனக்கு என தனி அடையாளம் பெற்ற இந்த கலை உலகத்தின் ஞானி யாகவும் வலம்  வந்த நம்ம உலக நாயகன் இந்த விஸ்வரூபத்தில் புதுமையாக என்ன தான் செய்து இருக்கிறார் என்று பார்போம்....




உலக சினிமா வரலாற்றில் இது வரை கண்டிராத கதை ஒன்றும் இல்லை சாதாரண கதை களத்தை கொண்டு வெகு அழகாக தன் இமாலய நடிப்பு,ஆக்சன்னுடன் அமெரிக்கா, ஆப்கான்சிஸ்தான் க்கு நம்மை பயணித்து கொண்டு செல்கிறார் உலக நாயகன். படத்தின் கதை அமெரிக்காவில் இருந்து பயணிக்க ஆரம்பிகிறது.கதையின் நாயகியான பூஜா குமார் Phd  கமலின் துணைவியாக வருகிறார். எப்படியாவது கமலை விவாகரத்து பண்ணனும் என்று டிடெக்டிவ் ஒருவரின் உதவியை நாடுகிறார். பூஜா குமாருக்கோ தன் முதலாளி மீது காதல். கமலின் முந்தய படைப்பு களை போன்று இங்கும் ஒரு ப்ராமின பெண் கமலிடம் இருந்து விவாகரத்து பெற துடிக்கிறார். என்ன செண்டிமெண்டோ தெரியவில்லை. கதக் நடன ஆசிரியர் ஆக படத்தின் முதல் அரை மணி நேரம் வாழ்ந்து இருக்கிறார் தலைவர். நடை,உடை, பாவனையில் பெண்மை  தெரியும் வகையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்...  "உன்னை காணாத நான்" பாடல் மிக அருமையாக வந்துள்ளது. அண்ட்ரியா,, கமலிடம் நடனம் பயலும் மாணவியாக வருகிறார்.


பூஜா குமாரின் டிடெக்டிவ் கமல் ஒரு முஸ்லிம் என பூஜாவிடம் சொல்ல்கிறார் அதே நேரம் அந்த டிடெக்டிவ் கொல்ல படுகிறார். கமல் பூஜா இருவரும் வில்லன் பிடியில் சிக்குகின்றனர். அந்த நேரத்தில் தான் தொழுக வேண்டும் கை கட்டை அவிர்த்து விடுமாறு கூறி

"ரப்பன் அதின பிதுனியாஹசன்தன் வபில் அக்ஹீரதி அசந்தன் வக்ஹின அரபானர்"



என்று கூறி விஸ்வரூபம் எடுக்கிறார் சரி கிளாஸ் ஆனா சீன். அந்த சண்டை காட்சி ஹாலிவுட் காப்பி ன்னு சொன்னாலும் பராவயில்லை கமல் அப்டி ஒரு சண்டை காட்சியை கொடுத்துள்ளார். 

பின்னர் வில்லன் முல்லா உமர் , கமல் உண்மையில் யார் என்று கூறுகிறார். கதை ப்ளாஷ் பெக் செல்கிறது ஆப்கானிஸ்தான் நோக்கி. ஆப்கான்சிதானில் எடுத்த காட்சிகள் மிக தத்துரூபமா எடுத்திருக்கிறார். அங்கு முல்லா உமர் மூலம் நாசர் தலைமையில் ஒரு கும்பலுடன் சேருகிறார். நாசர் வெறும் மூன்று காட்சிகளில் தோன்றி செல்கிறார் . கட் செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை. முல்லா உமர் மகன் ,கமல் இருவரும் பேசும் காட்சி அற்புதம்.அமெரிக்க ராணுவம், ஆப்கானிஸ்தான் மீது  குண்டு போடும் காட்சி அருமையாக வந்துள்ளது. தங்களை காட்டி கொடுத்த ஒருவரை தூக்கில் இட ஒரு ஊரே கூடி இருக்கிறது அந்த காட்சியில் கமல் குற்ற உணர்ச்சியால் தன் அக்மார்கான உருக்கமான  அழுகையுடன் செல்கிறார்.



பின்னர் அமெரிக்கா FBI யில் கமல் மாட்டி கொள்கிறார். சேகர் கபூர் வந்து அவர்களிடம் கமல் ஒரு இந்திய உளவுத்துறை அதிகாரி என்று கூறி அவரை விடுவிக்கிறார்.. நியூயார்க் நகரத்தை அழிக்க சதி உள்ளது என்று கமல் கூற, அமெரிக்க FBI மற்றும் பூஜா குமார் உதவியுடன் கமல், அந்த குண்டை செயல் இழக்க செய்து  கிளைமாக்ஸ் கொண்டு வந்துள்ளார்... இதற்கு நடுவில் தன் கூட்டாளியுடன் தனி விமானம் மூலம் தப்பித்து செல்கின்றனர்.. இன்னும் முழுமையாக முடியவில்லை இந்த போராட்டம் என்று கமல் பூஜாவிடம் கூறி விஸ்வரூபம் பார்ட் 2 என்று  போட்டு அணைத்து சினிமா ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்போடு முடிக்கிறார் உலக நாயகன்!!!



விஸ்வரூபம் பிளஸ் பாய்ண்ட்ஸ்!!!


கமல்... கமல்... கமல்
கமல் ட்ரான்ஸ்பெர்மேசன் சீன்!!!
ஆப்கானிஸ்தானில் நடக்கும் காட்சிகள்.


விஸ்வரூபம் மைனஸ் பாய்ண்ட்ஸ்

கமல் படம் என்பதாலோ என்னமோ நீங்க  சொல்லற லாஜிக் பாக்க எனக்கு தோனல



பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...