Monday, 25 March 2013

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! - லாஸ்ட் ஆன் நெட்


தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.. ஒவ்வொரு காட்சியும் ரொம்ப எதார்த்தமாக எடுத்துள்ளார்.பாலா அவர்கள் எரியும் பனிக்காடு என்ற நாவலில் உள்ள கதையை மையமாக  வைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தன் படைப்புகளில் மற்றுமொரு மைல் கல்லாக பரதேசியை  தந்துள்ளார்!!!

1939 ம் ஆண்டு சாலூர் கிராமத்தில், மக்கள் வருமானம் எதுவும் இன்றி சுதந்திரமான ஆட்டம் பாட்டம் கேளிக்கைகளோடு படம் தொடங்குகிறது. அந்த கிராமத்தில் தண்டரா போட்டு மக்கள் தருவதை சாப்பிட்டு வெகுளியாக  வாழ்ந்து வருகிறான் அதர்வா - ஒட்டு பொறுக்கியாக (அ) ராசா  . அவனை நினைக்கிறாள் வேதிகா (அங்கம்மா வாக ). அதர்வாவின் பாட்டியாக வருபவர் நடிக்க வில்லை அவராகவே வாழ்ந்து இருக்கிறார். பாலாவின் பாத்திர படிப்புகளை பற்றி சொல்லவே தேவையில்லை தாறு மாறு.... வேதிகா வை படத்தில் முதல் பாதியில் பார்க்கும் பொது ஜோதிகாவின் எக்ஸ்ப்ரெஸன்  நம் நினைவுக்கு கொண்டு வந்து செல்கிறது. அந்த கிராமத்தில் கல்யாணம் நடக்கும் போது ஊரே விழா கோலமாக இருக்கிறது எதற்காக நெல் சோறு உண்பதற்காக அந்த நேரத்தில்  அதர்வாவின் பெரியப்பா இறந்து போகிறார் அதை அதர்வாக்கு தெரியாமல் கல்யாணத்தை நடத்தி முடிகின்றனர். அதர்வா சாப்பிட அமர அவரிடம் வேதிகா ரகளை செய்தது கொண்டு இருக்க "ராசா வண்டிய விட்டுடுவேன்"  என்று கண்ணீர் மல்க கூறுவது அருமை. ஹட்ஸ் ஆப் டூ யு அதர்வா...
அந்த ஊரில் உள்ள வறுமையை வைத்து கங்காணி தேயிலை தோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களை அழைத்து செல்கிறான் .வைரமுத்து பாடல் வரிகளை ரத்தத்துல எழுதிருப்பார் போல மக்கள் ஊரை விட்டு செல்லும் பொது "செங்காடே " பாடலில் கங்காணி பேச்சு கேட்டு சனம் போகுதே" ... அருமையான பாடல். தேயிலை தோட்டத்தை 48  நாள் பயணத்திற்கு பிறகு வந்து அடைகின்றனர்... இதற்கு நடுவில் அங்கம்மா (வேதிகா) கர்ப்பம் அடைகிறாள் அவளின் தாய் அவளை வீட்டை விட்டு விரட்ட  ஒட்டு பொறுக்கி யின்  பாட்டியுடன் சேந்து இருக்கிறார் ... 


தேயிலை தோட்டத்தில் நம்ம ஒட்டு பொறுக்கிக்கு மரகதம் (தன்சிகா) வை சந்திக்கிறான். தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் ஆங்கிலேயன் அங்கு உள்ள பெண்களை தவறாக நடத்துகிறான்.அதர்வாவிற்கு தன் பாட்டியிடம் இருந்து அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி கடிதம் மூலமாக தெரிய வருகிறது. மரகதம் (தன்சிகா) அந்த காட்சியில் மிக எதார்த்தமாக நடித்து இருப்பார். சம்பள பணத்தை பிடித்து கொண்டு இன்னும் சில வருடம் அங்கேயே இருக்குமாறு ஏமாற்றுகிறான் கங்காணி. ஆங்கிலேயனிடம் , கங்காணி மன்னிப்பு கேட்கும் காட்சி சூப்பர் . கலக்கிடீங்க கங்காணி!!!  ஒட்டு பொறுக்கி அந்த தேயிலை தோட்டத்தில் இருந்து தப்பிக்கையில் மாட்டி கொள்கிறான். அவன் கால் நிரம்பு வெட்டப்பட்டு சித்ரவதை செய்ய படுகின்றான்... அந்த நேரத்தில் விஷ காய்ச்சலால் பலரது உயிர் போகிறது, மரகதமும் (தன்சிகா) இறந்து போகிறார். சிவசங்கர் பரிசுத்தமாக வந்து தன் மதத்திற்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களை மாற்றுகிறார்... "நியாயமாரே" என்று அதர்வா கங்காணி டம் கதறி அழும் காட்சி நம்ம தலையில் இடி விழ்ந்தது போல் இருக்கும். அப்படி ஒரு நடிப்பு, டயலாக் டெலிவரி.... சான்சே இல்ல  பாலா சார் உங்க படத்துல மட்டும் தான் இந்த மாதரி அழுத்தமான ஒரு காட்சி  பார்க்க முடியும்..... தேயிலை தோட்டத்தில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று கங்காணி புறப்பட்டு செல்கின்றான் 
இறுதியில் ஒட்டு பொறுக்கியும் அங்கம்மாவும்  சேர்ந்தார்களா ?? என்பது நெஞ்சை அதிர வைக்கும் கிளைமாக்ஸ்!!!
நாம் குடிக்கும் தேநீரில் உள்ள சுவையை தாண்டி இத்தனை பெரிய சுமையும் வலியும் உள்ளது என்பதை நம்மை உணரவைத்ததே பாலாவின் இமாலய வெற்றி. வாழ்த்துக்கள் சார்!!! இது பாலா சாரின் ஆறாவது படம் எல்லோர் மனதில் ஆறாத படம்....


2 comments:

  1. really nice hats off to bala sir

    ReplyDelete
  2. //இது பாலா சாரின் ஆறாவது படம் எல்லோர் மனதில் ஆறாத படம்....//

    வாழ்த்துக்கள் நண்பா.. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete