Monday, 25 March 2013

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! - லாஸ்ட் ஆன் நெட்


தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.. ஒவ்வொரு காட்சியும் ரொம்ப எதார்த்தமாக எடுத்துள்ளார்.பாலா அவர்கள் எரியும் பனிக்காடு என்ற நாவலில் உள்ள கதையை மையமாக  வைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தன் படைப்புகளில் மற்றுமொரு மைல் கல்லாக பரதேசியை  தந்துள்ளார்!!!

1939 ம் ஆண்டு சாலூர் கிராமத்தில், மக்கள் வருமானம் எதுவும் இன்றி சுதந்திரமான ஆட்டம் பாட்டம் கேளிக்கைகளோடு படம் தொடங்குகிறது. அந்த கிராமத்தில் தண்டரா போட்டு மக்கள் தருவதை சாப்பிட்டு வெகுளியாக  வாழ்ந்து வருகிறான் அதர்வா - ஒட்டு பொறுக்கியாக (அ) ராசா  . அவனை நினைக்கிறாள் வேதிகா (அங்கம்மா வாக ). அதர்வாவின் பாட்டியாக வருபவர் நடிக்க வில்லை அவராகவே வாழ்ந்து இருக்கிறார். பாலாவின் பாத்திர படிப்புகளை பற்றி சொல்லவே தேவையில்லை தாறு மாறு.... வேதிகா வை படத்தில் முதல் பாதியில் பார்க்கும் பொது ஜோதிகாவின் எக்ஸ்ப்ரெஸன்  நம் நினைவுக்கு கொண்டு வந்து செல்கிறது. அந்த கிராமத்தில் கல்யாணம் நடக்கும் போது ஊரே விழா கோலமாக இருக்கிறது எதற்காக நெல் சோறு உண்பதற்காக அந்த நேரத்தில்  அதர்வாவின் பெரியப்பா இறந்து போகிறார் அதை அதர்வாக்கு தெரியாமல் கல்யாணத்தை நடத்தி முடிகின்றனர். அதர்வா சாப்பிட அமர அவரிடம் வேதிகா ரகளை செய்தது கொண்டு இருக்க "ராசா வண்டிய விட்டுடுவேன்"  என்று கண்ணீர் மல்க கூறுவது அருமை. ஹட்ஸ் ஆப் டூ யு அதர்வா...
அந்த ஊரில் உள்ள வறுமையை வைத்து கங்காணி தேயிலை தோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களை அழைத்து செல்கிறான் .வைரமுத்து பாடல் வரிகளை ரத்தத்துல எழுதிருப்பார் போல மக்கள் ஊரை விட்டு செல்லும் பொது "செங்காடே " பாடலில் கங்காணி பேச்சு கேட்டு சனம் போகுதே" ... அருமையான பாடல். தேயிலை தோட்டத்தை 48  நாள் பயணத்திற்கு பிறகு வந்து அடைகின்றனர்... இதற்கு நடுவில் அங்கம்மா (வேதிகா) கர்ப்பம் அடைகிறாள் அவளின் தாய் அவளை வீட்டை விட்டு விரட்ட  ஒட்டு பொறுக்கி யின்  பாட்டியுடன் சேந்து இருக்கிறார் ... 


தேயிலை தோட்டத்தில் நம்ம ஒட்டு பொறுக்கிக்கு மரகதம் (தன்சிகா) வை சந்திக்கிறான். தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் ஆங்கிலேயன் அங்கு உள்ள பெண்களை தவறாக நடத்துகிறான்.அதர்வாவிற்கு தன் பாட்டியிடம் இருந்து அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி கடிதம் மூலமாக தெரிய வருகிறது. மரகதம் (தன்சிகா) அந்த காட்சியில் மிக எதார்த்தமாக நடித்து இருப்பார். சம்பள பணத்தை பிடித்து கொண்டு இன்னும் சில வருடம் அங்கேயே இருக்குமாறு ஏமாற்றுகிறான் கங்காணி. ஆங்கிலேயனிடம் , கங்காணி மன்னிப்பு கேட்கும் காட்சி சூப்பர் . கலக்கிடீங்க கங்காணி!!!  ஒட்டு பொறுக்கி அந்த தேயிலை தோட்டத்தில் இருந்து தப்பிக்கையில் மாட்டி கொள்கிறான். அவன் கால் நிரம்பு வெட்டப்பட்டு சித்ரவதை செய்ய படுகின்றான்... அந்த நேரத்தில் விஷ காய்ச்சலால் பலரது உயிர் போகிறது, மரகதமும் (தன்சிகா) இறந்து போகிறார். சிவசங்கர் பரிசுத்தமாக வந்து தன் மதத்திற்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களை மாற்றுகிறார்... "நியாயமாரே" என்று அதர்வா கங்காணி டம் கதறி அழும் காட்சி நம்ம தலையில் இடி விழ்ந்தது போல் இருக்கும். அப்படி ஒரு நடிப்பு, டயலாக் டெலிவரி.... சான்சே இல்ல  பாலா சார் உங்க படத்துல மட்டும் தான் இந்த மாதரி அழுத்தமான ஒரு காட்சி  பார்க்க முடியும்..... தேயிலை தோட்டத்தில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று கங்காணி புறப்பட்டு செல்கின்றான் 
இறுதியில் ஒட்டு பொறுக்கியும் அங்கம்மாவும்  சேர்ந்தார்களா ?? என்பது நெஞ்சை அதிர வைக்கும் கிளைமாக்ஸ்!!!
நாம் குடிக்கும் தேநீரில் உள்ள சுவையை தாண்டி இத்தனை பெரிய சுமையும் வலியும் உள்ளது என்பதை நம்மை உணரவைத்ததே பாலாவின் இமாலய வெற்றி. வாழ்த்துக்கள் சார்!!! இது பாலா சாரின் ஆறாவது படம் எல்லோர் மனதில் ஆறாத படம்....


Monday, 11 February 2013

விஸ்வரூபம் எனது பார்வையில்!!!


மே 1 2012 விஸ்வரூபம் டீசெர் ரிலீஸ் ஆன நாள் முதல் அணைத்து தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்ப படம் வெளிவரும் என்று. பல தடங்கல்களுக்கு பிறகு  உலக நாயகன்  படைப்பு  நம் தமிழகத்தில் பிப்ரவரி  7ம்  நாள் ரிலீஸ் ஆனது. தன் ஒவ்வொரு படைப்புகளிலும் தனக்கு என தனி அடையாளம் பெற்ற இந்த கலை உலகத்தின் ஞானி யாகவும் வலம்  வந்த நம்ம உலக நாயகன் இந்த விஸ்வரூபத்தில் புதுமையாக என்ன தான் செய்து இருக்கிறார் என்று பார்போம்....
உலக சினிமா வரலாற்றில் இது வரை கண்டிராத கதை ஒன்றும் இல்லை சாதாரண கதை களத்தை கொண்டு வெகு அழகாக தன் இமாலய நடிப்பு,ஆக்சன்னுடன் அமெரிக்கா, ஆப்கான்சிஸ்தான் க்கு நம்மை பயணித்து கொண்டு செல்கிறார் உலக நாயகன். படத்தின் கதை அமெரிக்காவில் இருந்து பயணிக்க ஆரம்பிகிறது.கதையின் நாயகியான பூஜா குமார் Phd  கமலின் துணைவியாக வருகிறார். எப்படியாவது கமலை விவாகரத்து பண்ணனும் என்று டிடெக்டிவ் ஒருவரின் உதவியை நாடுகிறார். பூஜா குமாருக்கோ தன் முதலாளி மீது காதல். கமலின் முந்தய படைப்பு களை போன்று இங்கும் ஒரு ப்ராமின பெண் கமலிடம் இருந்து விவாகரத்து பெற துடிக்கிறார். என்ன செண்டிமெண்டோ தெரியவில்லை. கதக் நடன ஆசிரியர் ஆக படத்தின் முதல் அரை மணி நேரம் வாழ்ந்து இருக்கிறார் தலைவர். நடை,உடை, பாவனையில் பெண்மை  தெரியும் வகையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்...  "உன்னை காணாத நான்" பாடல் மிக அருமையாக வந்துள்ளது. அண்ட்ரியா,, கமலிடம் நடனம் பயலும் மாணவியாக வருகிறார்.


பூஜா குமாரின் டிடெக்டிவ் கமல் ஒரு முஸ்லிம் என பூஜாவிடம் சொல்ல்கிறார் அதே நேரம் அந்த டிடெக்டிவ் கொல்ல படுகிறார். கமல் பூஜா இருவரும் வில்லன் பிடியில் சிக்குகின்றனர். அந்த நேரத்தில் தான் தொழுக வேண்டும் கை கட்டை அவிர்த்து விடுமாறு கூறி

"ரப்பன் அதின பிதுனியாஹசன்தன் வபில் அக்ஹீரதி அசந்தன் வக்ஹின அரபானர்"என்று கூறி விஸ்வரூபம் எடுக்கிறார் சரி கிளாஸ் ஆனா சீன். அந்த சண்டை காட்சி ஹாலிவுட் காப்பி ன்னு சொன்னாலும் பராவயில்லை கமல் அப்டி ஒரு சண்டை காட்சியை கொடுத்துள்ளார். 

பின்னர் வில்லன் முல்லா உமர் , கமல் உண்மையில் யார் என்று கூறுகிறார். கதை ப்ளாஷ் பெக் செல்கிறது ஆப்கானிஸ்தான் நோக்கி. ஆப்கான்சிதானில் எடுத்த காட்சிகள் மிக தத்துரூபமா எடுத்திருக்கிறார். அங்கு முல்லா உமர் மூலம் நாசர் தலைமையில் ஒரு கும்பலுடன் சேருகிறார். நாசர் வெறும் மூன்று காட்சிகளில் தோன்றி செல்கிறார் . கட் செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை. முல்லா உமர் மகன் ,கமல் இருவரும் பேசும் காட்சி அற்புதம்.அமெரிக்க ராணுவம், ஆப்கானிஸ்தான் மீது  குண்டு போடும் காட்சி அருமையாக வந்துள்ளது. தங்களை காட்டி கொடுத்த ஒருவரை தூக்கில் இட ஒரு ஊரே கூடி இருக்கிறது அந்த காட்சியில் கமல் குற்ற உணர்ச்சியால் தன் அக்மார்கான உருக்கமான  அழுகையுடன் செல்கிறார்.பின்னர் அமெரிக்கா FBI யில் கமல் மாட்டி கொள்கிறார். சேகர் கபூர் வந்து அவர்களிடம் கமல் ஒரு இந்திய உளவுத்துறை அதிகாரி என்று கூறி அவரை விடுவிக்கிறார்.. நியூயார்க் நகரத்தை அழிக்க சதி உள்ளது என்று கமல் கூற, அமெரிக்க FBI மற்றும் பூஜா குமார் உதவியுடன் கமல், அந்த குண்டை செயல் இழக்க செய்து  கிளைமாக்ஸ் கொண்டு வந்துள்ளார்... இதற்கு நடுவில் தன் கூட்டாளியுடன் தனி விமானம் மூலம் தப்பித்து செல்கின்றனர்.. இன்னும் முழுமையாக முடியவில்லை இந்த போராட்டம் என்று கமல் பூஜாவிடம் கூறி விஸ்வரூபம் பார்ட் 2 என்று  போட்டு அணைத்து சினிமா ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்போடு முடிக்கிறார் உலக நாயகன்!!!விஸ்வரூபம் பிளஸ் பாய்ண்ட்ஸ்!!!


கமல்... கமல்... கமல்
கமல் ட்ரான்ஸ்பெர்மேசன் சீன்!!!
ஆப்கானிஸ்தானில் நடக்கும் காட்சிகள்.


விஸ்வரூபம் மைனஸ் பாய்ண்ட்ஸ்

கமல் படம் என்பதாலோ என்னமோ நீங்க  சொல்லற லாஜிக் பாக்க எனக்கு தோனலTuesday, 15 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா விமர்சனம்!!!திரைகதை திலகம் கே. பாக்கியராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளி வந்த சக்கை போடு போட்ட "இன்று போய் நாளை வா"  படத்தின் கதை தான் இந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா... 


இயக்குனர் மணிகண்டன் சிறு சிறு மாற்றத்துடன் இந்த படத்தை சந்தானம்,பவர் ஸ்டார், மற்றும் சேது வை வைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பொங்கலன்று சுவையான லட்டை கொடுத்துள்ளார். 


படத்தின் கதை ஊருல வேலை வெட்டி எதுவும் இல்லமால் சும்மா சுத்துற மூன்று நண்பர்கள் (சிவா , கே.கே , நம்ம பவர் குமார்) , ஒரு பெண்ணை (விஷாகா) மூன்று பேரும்  தொரத்தி தொரத்தி காதலிகின்றனர். கடைசியில் யார் விஷாகா வை கை பிடித்தார் என்பதை அருமையான நகைச்சுவையுடன் வழங்கியுள்ளார்  இயக்குனர். 


மூன்று நண்பர்களின் அறிமுக காட்சி தான் டாப் அதுலயும் நம்ம பவர் ஸ்டார் இன்ட்ரொ சரியான மாஸ். திரை அரங்கில் அப்படி ஒரு அப்லாஸ்!!! பிளஸ் டூ படிக்கிற பொண்ணுக்கு பவர் ஸ்டார் நூல் விடுற காட்சியும் அந்த பொண்ணு உங்களை எங்க அப்பா கல்யாண போட்டோல பாத்திருக்கிறேன்  நீங்க அப்பாவோட நண்பர் தான என்று சொல்ல பவர் பேசி  சமாளிக்கிற காட்சி சரியான கலாய். 
சந்தானம், பவர் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் டாப். பவர் ஸ்டாரின் ஸ்க்ரீன் பிரசன்ஸே காமெடி தான். மனுஷர் டயலாக் தான் சரியாய் மேட்ச் ஆகல மத்த படி இந்த பொங்கல் நம்ம பவர் பொங்கல் தான்...

சந்தானத்துக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் குருவாக VTV கணேஷ் வந்து அசத்தியுள்ளார். சந்தானம் கணேஷுக்கு பாடை கட்டும் சீன் சரியான கிளாஸ்!!!  VTV கணேஷின் மனைவியாக கோவை சரளா பட்டாசு போல் பட பட வென வந்து பேசி போகிறார். சந்தானம் தன் படம் என்றதால் என்னமோ மனுஷன் ரொம்ப மெனக்கட்டு நடிச்சிருக்கிறார்.

 தமிழ் சினிமாவில் கவுன்ட்டர் அட்டாக் காமெடி சந்தானத்துக்கே உரியதாய் விட்டது. தன்னை பெரிய திரைக்கு அறிமுக படுத்திய சிம்புவுக்கு சந்தானம் மரியாதை செய்யும் நிமித்தமாக இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துள்ளார். #நண்பன்டா 
சேது ரொம்ப அலட்டி கொள்ளாமல் நடித்து பொய் இருகிறார். விஷாகா கொடுத்த வேலையை தன்னால் முடிந்தமட்டும் செய்து இருக்கிறார்! ராதிகாவிடம் இருந்த வெகுளி தனம் விஷாகாவிடம் இல்லை. பட்ஜெட்க்கு ஏத்த மாதரி தான ஹீரோயின் கிடைக்கும். 

படத்தின் இசை அமைப்பாளர் தமன் "கண்ணா லட்டு தின்ன ஆசையா", "லவ் லெட்டெர் கொடுக்க ஆசை பட்டேன்" பாடல்களை அருமையாக தந்துள்ளார். 

கண்ணா லட்டு தின்ன ஆசையா நன்றாக ர(ரு)சித்து பாருங்கள்...