Wednesday 19 December 2012

நீ தானே என் பொன்வசந்தமும் என் இரண்டரை மணி நேரமும்!!!




நீ தானே என் பொன்வசந்தமும் என் இரண்டரை மணி நேரமும்!!!

இசை ஞானி இளையராஜா,கௌதம்,ஜீவா,சமந்தா, மற்றும் எவர் கிரீன் சந்தானம் ஆகிய பெரிய கூட்டணி கண்டிப்பாக படம் சூப்பரா இருக்கும் என்று போயி உட்காந்தா....

படம் ஆரம்பித்தவுடன் பாடல் "பிடிக்கல மாமு" இன்டெர் காலேஜ் மீட் செம எதிர்பார்ப்போடு ஒரு அரை மணி நேரம் போயிருக்கும் அப்புறம் எப்ப பாத்தாலும் வருண் அண்ட் நித்யா 16, 20 ,22 , 24 வயதில் மூணு மாசத்துக்கு அப்பறம் ன்னு போட்டு நம்ம பொறுமைய சோதிச்சுருவாறு டைரக்டர். கௌதம் உங்க லவ் சுப்ஜெக்ட் ல இருந்து கொஞ்சம் வெளியில வாங்க சார்.

இண்டர்வல் க்கு அப்பறம் வருண், நித்யா ரெண்டு பெரும் சண்ட போடுவாங்க சேருவாங்க.....சண்ட போடுவாங்க சேருவாங்க..... சமந்தா பொண்ணு கண்ணீர் வடிக்கும்.. நல்ல வேலை இரண்டு பெரும் (வருண் அண்ட் நித்யா ) ஒரு முடிவுக்கு 2.30 மணி நேரத்துல வந்தாதால வீட்டுக்கு கிளம்பியாச்சு ஷப்ப்ப்பா முடியலா!!! இதுல VTV சீன் வேற... 






படத்தில சில விஷயம் மட்டும் தான் ஆறுதல் இசை ஞானி இளையராஜா!!!, ஜீவா வின் நடிப்பு சில கட்சிகளில்,... சமந்தாவின் எக்ஸ்ப்ரெஷன்.... 

கௌதம் சார் பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்!!!

நீ தானே என் பொன்வசந்தம் - This could be your HEAD ACHE story!

Monday 17 December 2012

கும்கி







நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் விக்ரம் பிரபுவின் முதல் படம் , மைனா புகழ் டைரக்டர் பிரபு சாலமன் மற்றுமொரு மைல் கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் வந்த படம் தான் கும்கி... 

டைரக்டர் பிரபு சாலமன் வித்தியாசமான கதை களத்தை எடுத்து தனக்கு உரிய பாணியில் காடு, மலை, அருவிகளுக்கு நடுவே இந்த தடவை யானையையும் , பாகனை யும் வைத்து தந்துள்ளார்.

படத்தின் முக்கிய அம்சமாக உயிர் ஓட்டம் தந்தவர் இசை அமைப்பாளர் இம்மான்! ஒவ்வொரு பாடலும் மிக அருமை. கேமராமென் சுகுமார் ஒவ்வொரு காட்சியுளும் அசத்தியுள்ளார்! 






தம்பி ராமையா படத்துக்கான இன்னொரு பிளஸ். விக்ரம் பிரபு யானை பாகனுக்கு காண ஏற்ற தேடல். லக்ஷ்மி மேனன் நன்று. 

டைரக்டர் ராஜேஷ் க்கு சந்தானம் போன்று பிரபு சாலமன் க்கு தம்பி ராமையா.. கலக்கி புட்டிங்க சார் #தம்பி ராமையா.

படத்தில் சில இடங்களில் சுவாரசியம் இல்லை, கிராபிக்ஸ் காட்சி சொல்லும் படியாக வரவில்லை. மொத்தத்தில் கும்கி ஒரு தடவை கண் குளிர பார்த்து ரசிக்கலாம் !!!

Thursday 22 November 2012

துப்பாக்கி



சாதரமான கதை களத்தை வைத்து அணைத்து சினிமா ரசிகர்களும் பாரட்டும் படியாக விஜய் வைத்து இந்த படத்தை தந்துள்ளார் டைரக்டர் முருகதாஸ் . #முருகதாஸ்

இளைய தளபதி விஜையால் ரீமேக் படத்தை தவிர ஹிட் கொடுக்க முடியுமா என்று நினைத்த எனக்கும், உங்களில் பல பேருக்கும் தான் இந்த படம் துப்பாக்கி. #விஜய்

படத்தின் பிளஸ்

1. டைரக்டர் முருகதாசின் அழகான ஸ்க்ரீன் ப்ளே
2. விஜயின் ஸ்டைல்,டயலாக் டெலிவரி
3. இடைவேளைக்கு முன்னதாக 15 நிமிடம், கிளைமாக்ஸ் முன்னதாக 15 நிமிடம் மிக அருமை. 
4. வித்யுத்

படத்தின் மைனஸ்

1. பாடல்கள்
2. கிளைமாக்ஸ் காட்சி. 

துப்பாக்கி ~~ மாஸ்!!! #விஜய் #துப்பாக்கி #முருகதாஸ்



Monday 17 September 2012

சுந்தரபாண்டியன்


சுப்ரமணிய புரம், நாடோடிகள், போராளி வரிசையில் டைரக்டர் சசிகுமார் ஹீரோ வாக நடித்து கலக்கி இருக்கும் படம் சுந்தரபாண்டியன். இப்படத்தில் தன் முந்தய பார்முலாவை தான் இங்கும் நமக்கு தந்துள்ளார் சிறிய மாற்றங்களோடு வெகு அழகாக . 



படத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக சசி குமார் ஒரு கெத்துடன் வலம் வருகிறார். அறிமுக பாடலில் ரஜினியின் டான்சை நம் நினைவுக்கு கொண்டு வந்து செல்கிறார். படத்தின் முதல் பாதி சசி குமார் , ஒரு டீ கடை , தாமரை என்ற தனியார் பேருந்து, ஆண்டிபட்டி பேருந்து நிலையம், பரோட்டா மணி(சுரி), அப்பு குட்டி அவருடைய நண்பர்கள் பட்டாளம் கதையின் நாயாகியான லக்ஷ்மி மேனனை சுற்றியே வேகமாக பயணிக்கிறது... 



தவணை முறையில் (ஒரு மாதத்துக்குள்) லக்ஷ்மி மேனனை காதல் வலையில் விழ வைக்க வேண்டும் என்று சசி குமார் அவருடைய நண்பருக்கும், அப்பு குட்டிக்கும் பெட் வைக்கிறார். நண்பர்களும் சுழற்சி முறையில் ட்ரை பண்றாங்க... ஆனா நம்ம ஹீரோ ஏற்கனவே லக்ஷ்மி மேனன்னை ஒரு தலையாக காதலித்தது தெரியாமல்... சசி குமார் தான் காதலித்த பெண் இவள் தான் என்று சொல்லும் காட்சியில் சூரியின் நடிப்பு அருமை. இந்த போட்டியில் அப்பு குட்டி கொல்ல படுகிறார் கொலை பழியை நம்ம கதையின் நாயகன் ஏற்று கொண்டு ஜெயிலுக்கு செல்கிறார். 

படத்தின் இரண்டாம் பாதயில் சசி குமார் எப்படி லக்ஷ்மி மேனன்னை கை பிடிக்கிறார் என்பதை விறு விருப்பாக மீதி கதையை சொல்லி முடிக்கிறார் டைரக்டர் "நட்புடன்" .

லக்ஷ்மி மேனன் கிராமத்து பொன்னுக்காண சிறந்த தேடல். # அட நம்ம கும்கி பட கதையின் நாயகியும் இவங்க தான் பா ... # கும்கி # லக்ஷ்மி மேனன்.

நரேன் (சசி குமாரின் தந்தை) & தென்னவன் ( லக்ஷ்மி மேனனின் தந்தை) இருவரின் நடிப்பும் மிக அருமை. 

படத்தில் ஒவ்வொரு கதா பாத்திரமும் அவ்வளவு அருமையாக தேடி எடுத்துள்ளார் டைரக்டர், குறிப்பாக சசிகுமாரின் பாட்டியாக வருபவர்கள், அத்தை பொன்னாக வருபவர் . லக்ஷ்மி மேனன் சித்தியாக வருபவர். 

" குத்தினது நண்பனா இருந்தா செத்தா கூட வெளியல சொல்ல கூடாது " # சசி குமார் # சுந்தர பாண்டியன் 

நட்பை மையமாக வைத்து இன்னொரு படம் சசி குமார் எடுத்தாலும் கண்டிப்பாக வெற்றி தான். # சசி குமார் # சுந்தர பாண்டியன் 
 

சுந்தர பாண்டியன் - நண்பேண்டா. 
 

Monday 10 September 2012

முகமூடி




குங்பூ கலையை மையமாக வைத்து யு.டி.வி தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் தமிழில் முதல் சூப்பர் ஹீரோ படம் என்ற பெருமையுடன் சென்ற வாரம் வெளி வந்த படமான முகமூடி எனது பார்வையில் ....

ஓபனிங் சீன் லாம் நல்ல தான் இருந்தது ஒரே இருட்டு, தூரத்தில் ஐந்து தெரு விழக்கு மட்டும் எரிந்து கொண்டு இருகின்றது திடீர் என கால்களை க்ளோஸ் ப்பில் காட்டுவது அடேங்கப்பா மிஸ்கின் அவர் டச்ச கொடுக்க ஆரம்பிச்சுட்டார்ப்பா ன்னு நினைச்சா ....

படம் அசூர மொக்கை....

சூப்பர் ஹீரோ + மசாலா வையும் தருவதுற்காக மிஸ்கின் ரொம்ப மெனக்கிட்டு தோற்று விட்டார்.


படத்தில் பிளஸ்
 
1. கேமரா 

2. குங்பூ காட்சிகள்

3. பார் ஆந்தம் பாடல்!!! 

படத்தின் நெகடிவ்
1. குங்பூ மாஸ்டர் ஆக வரும் செல்வா [ மிஸ்கின் உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா?]

2. நரேன் வில்லனாக காமெடி பண்ணுகிறார் [ பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் நரேன் ]

3. ஹீரோயின் வேஸ்ட்....

4. மந்தமான கதை களம் 

முகமூடி - கந்தசாமியின் சித்தப்பா மகன்...

Friday 27 July 2012

சின்ன குயில் சித்ரா!!!



ஆறு நேஷனல் பிலிம் அவார்ட் பெற்ற ஒரே பெண் பாடகர் சின்ன குயில் சித்ரா விற்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 

சின்ன குயில் சித்ரா என்றால் நம் கண் முன் அவர் புன்னகையான முகம் தான் தோன்றும். பல பாடல் ஆசிரியர்களின் வரிகளுக்கு தன் மந்திர குரலால் உயிர் கொடுத்துள்ளார். என் நெஞ்சில் நின்ற அவர் பாடிய பாடல்கள் சில



பூஜைக்கு ஏத்த பூவிது ... [நீ தானே அந்த குயில்]

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் [புன்னகை மன்னன்]

பாடறியேன் படிப்பறியேன் [சிந்து பைரவி]

புத்தம் புது பூமி வேண்டும் [திருடா திருடா ]

தென் கிழக்குச் சீமையிலே [கிழக்குச் சீமையிலே]

கண்ணலானே எனது கண்ணை ... [பம்பாய் ]

நீ ஆண்டவனா தாய் தந்தை தான் ... [வானமே எல்லை ]

இன்னிசை பாடி வரும் [துள்ளாத மனமும் துள்ளும்] 

.........................
..........................

இன்னும் இசை துறையில் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்....

Thursday 19 July 2012

கரகாட்டக்காரன்!!!



பல வருடங்களுக்கு பிறகு நம்ம மக்கள் நாயகன் (பசு நேசன்) ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படம் சன் டிவியில் நேற்று பார்த்து ரசித்தேன். 

கவுண்டமணி, செந்தில் இருவரும் நடித்ததில் இந்த படம் ஒரு இமயம் என்று தயங்காமல் சொல்லலாம்.

கவுண்டமணியின் ஒவ்வொரு வசனமும் நக்கலின் உச்சமாக இருக்கும்....

அடே என்ன பார்த்து ஏன்டா அந்த கேள்வியை கேட்ட??

நீ வாங்குற அஞ்சு பத்து பிட்சைக்கு இது தேவையா?

என்னடி கலர் கலர் ஆ ரீல் விடுற...

வாயில பல்லு குச்சிய வச்சிட்டு எங்க அரண்மனைக்கா போவாங்க ?

தகர டப்பால பெயிண்ட் அடிச்சு அத இவரு தட்டுனா நீங்க அப்படியே நீங்க தில்லான ஆடிருவிங்கலோ....

ஒரே ஒரு முக்கா கை பனியன் இருந்தது அதுவும் இப்படி போயிருச்சு ....

படத்தோட இன்னொரு முக்கிய அம்சம் சண்முக சுந்தரத்தின் டயலாக்.. 


 உன்னக்காக ஏழு வருஷம் ஜெயில்ல இருந்தேன் அக்கா.. என்ன பூட்ஸ் கால்ல வாயில எட்டி உதசாங்க என் வாயில் இருந்து இரத்தம் ரத்தமா வந்திசுக்கா..உன் புருஷன் திருடன் ன்னு என் வாயல? எப்படிக்கா சொல்லுவேன் (அல்டிமேட் ஒன்) 

# கரகாட்டக்காரன் # கங்கை அமரன் # இசை ஞானி #ராமராஜன் #கவுண்டமணி # செந்தில்

Friday 13 July 2012

பில்லா II


அஜித் படம்னா ரொம்ப ஸ்டைல் ஆக அவர காட்டனும் என்று டைரக்டர் சக்ரி டோலெட்டியிடம் யாராவது சொல்லி இருப்பாங்க போல 
அஜித் நல்ல ஸ்டைல் ஆக காட்டிவிட்டு படத்தின் கதையில் கோட்டை விட்டுட்டார்.

படத்தின் ட்ரைலர யுனிவேர்செல் ஆடி தள்ளுபடி மாதரி அடிக்கடி டிவியில் போடமால் இருந்திருந்தால் அஜித் இன் பஞ்ச் டயலாக் இன்னும் 
வெகுவாக அணைத்து சினிமா ரசிகர்களும் ரசிக்கும் படியாக இருந்திற்கும். # ஓவர் விளம்பரம் தமிழ் சினிமாவுக்கு ஆகாது

அஜித் அவருடைய ரசிகர்களை ஏமாற்றாமல் நடித்திருக்கிறார். அஜித்தின் நண்பராக வரும் ரஞ்சித் மிக அருமையாக அவருக்கு கொடுத்த 
வேலையை செய்து உள்ளார். கதாநாயகிகள் இருவரும் அப்ப அப்ப சால்ட் அண்ட் பெப்பர் போல வந்து போறாங்க.

வில்லன் இருவரும் ஆகா ஓகோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை.



கிளைமாக்ஸ்ல வரும் ஹெலிகாப்ட்டர் காட்சியை மிக அருமையாக எடுத்து உள்ளனர். தல ரொம்ப ரிஸ்க் எடுத்து அந்த காட்சியை செய்துள்ளார்.

யுவன் ஏனோ படத்தில் பின்னணி இசையை பில்லாவில் செய்த அளவுக்கு இந்த படத்தில் தரவில்லை. Gangster பாட்டு ஏன் படம் முடிந்தவுடன் போட்டாங்க ன்னு தெரியல. 

அஜித் காகவும் & ராஜசேகர் (கேமரா) எடுத்த விதத்திற்காக ஒரு தடைவை தாரளமாக பார்க்கலாம். 

நல்ல கதை களம் கொடுத்திருந்தால் இந்த டேவிட் பில்லா அணைத்து ரசிகர்கள் மனதிலும் நின்று இருப்பார். 

பில்லா II - கண்டிப்பாக அஜித் ரசிர்களுக்கான படம். 

சக்ரி டோலெட்டி - #Fail
 

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...